டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் மாற்றம்
இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 6.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் வாராந்த பொருளாதார தரவு அறிக்கையின்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் கையிருப்பு பணம் அதிகரித்துள்ளது.

வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியில் வைத்துள்ள வைப்புத் தொகை அதிகரித்துள்ளமை இதற்கு முக்கிய காரணமாகும்.
இதனிடையே, இந்த வாரம் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தைகளில் திறைசேரி உண்டியல்களின் வட்டிவீதங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்துள்ள திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரிப் பத்திரங்களின் ரூபாய் பெறுமதி இந்த வாரம் சுமார் 4.5 சதவீதத்தால் குறைந்துள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.