யாழில் விபத்து ஏற்படும் வகையில் எல்லை கற்கள் அமைத்த தொல்லியல் திணைக்களம்
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டார பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிக்கு மிக அருகாமையில் (ஐந்து அடிக்கு உட்பட்ட) தொல்லியல் திணைக்களத்தினால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டுள்ளது.
இநிலையில் தொடர்பாக நேற்றைய தினம் (16) யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன் நேரடியாக சென்று ஆராய்ந்தாா் .
பாரதூரமான விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியப்பாடு
இந்நிலையில் குறித்த எல்லைக்கற்கள் வீதிக்கு அருகாமை காணப்படுவதனால், பாரதூரமான விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியப்பாடு காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது.
இந்நிலையில் , நாட்டப்பட்ட 48 எல்லைக்கற்களையும் அப்புறப்படுத்துவதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அளவுப் பிரமாணங்களுக்கமைய அபிவிருத்தி அதிகார சபையின் எழுத்து மூல அனுமதியினைப் பெற்று எல்லைக்கற்களை நாட்டுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இந்த விஜயத்தின் போது, தொல்லியல் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் U.A.பந்துல ஜீவ ,மாவட்ட மேலதிக செயலர் கே. சிவகரன் , யாழ் பிரதேச செயலாளர் சா.சுதர்சன், உதவி மாவட்ட செயலாளர் உ.தர்சினி, தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மான உத்தியோகத்தர் பா.கபிலன், கோட்டை பொறுப்பதிகாரி S.உசாந்தினி ஆகியோரும் உடனிருந்தனர்.