இராணுவ முகாமிற்குள் அடிதடி ; பேருந்து சாரதி கொடூர கொலை
கொழும்பு தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தரமுல்ல - நாகஹமுல்ல பகுதியில் இராணுவ முகாமில் பணியமர்த்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
சாரதிகளுக்கு இடையே தகராறு
இராணுவ முகாமில் பணியமர்த்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரால் மற்றொருவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதால் அவர் தலையிலும் உடலிலும் காயமடைந்துள்ளார்.
கடுமையாக காயமடைந்த சாரதி இராணுவத்தினரால் தலங்கம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.