11 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை ; ஆசியரிடம் அழுத மாணவன்
மொனராகலை,தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துல்கோட்டை பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த அயல் வீட்டு குடும்பஸ்தர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் சம்பவம் தொடர்பாக தனது ஆசிரியருக்கு தெரிவித்ததையடுத்து ஆசிரியரால் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவன்
அதன்படி விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸாருக்கு, சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில், அவரது வீட்டில் வைத்து மற்றும் சிறுவனின் வீட்டில் வைத்து, சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை வெல்லவாய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக தனமல்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.