நாளை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சேவைகள் வழமை போன்று இடம்பெறும்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சேவைகள் நாளை திங்கட்கிழமை வழமை போன்று வழங்கப்படும் எனப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
பல்வேறு தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக நாளை திணைக்களத்தின் வழமையான செயற்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என வெளியான கூற்றுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சு இந்தத் தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது.

குறித்த தகவல்கள் பொய்யானவை என நிராகரித்துள்ள அமைச்சு, கடவுச்சீட்டு வழங்குதல் மற்றும் விசா தொடர்பான செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் எவ்விதத் தடங்கல்களோ தாமதங்களோ இன்றித் தொடரும் எனப் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
திணைக்களத்தினால் வழமையாக வழங்கப்படும் அனைத்துச் சேவைகளும் திட்டமிட்டபடி தொடர்ந்து இயங்கும் எனவும் அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது.