இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு ; கொழும்பில் 12,000ஐ தாண்டிய தொற்று!

Colombo Kalutara Dengue Prevalence in Sri Lanka
By Sulokshi Jul 04, 2026 07:01 AM GMT
Report

   கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 12,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 12,017 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இது ஒட்டுமொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் சதவீத அடிப்படையில் 20.43% ஆகும். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் ஒட்டுமொத்தமாக 58,810 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மரணங்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு ; கொழும்பில் 12,000ஐ தாண்டிய தொற்று! | Dengue Threatens Colombo Exceed 12 000

மூன்று நாட்களில் மாத்திரம் 3,422 நோயாளர்கள் 

அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 2,604 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும், ஜூலை மாதத்தின் முதல் மூன்று நாட்களில் மாத்திரம் 3,422 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அலி கமேனியின் இறுதிச்சடங்கில் இலங்கை பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு; உலகை உலுக்கிய புகைப்படம்

அலி கமேனியின் இறுதிச்சடங்கில் இலங்கை பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு; உலகை உலுக்கிய புகைப்படம்

கடந்த 7 மாத காலப்பகுதியில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 21,547 ஆகும். இதற்கு மேலதிகமாக, ஜனவரி மாதத்தில் 7,866 பேரும், பெப்ரவரி மாதத்தில் 5,721 பேரும், மார்ச் மாதத்தில் 6,013 பேரும், ஏப்ரல் மாதத்தில் 5,651 பேரும், மே மாதத்தில் 8,590 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

லலித் , குகன் வழக்கு ஆகஸ்ட் 07ஆம் திகதிக்கு; கோட்டாபய அச்சம்!

லலித் , குகன் வழக்கு ஆகஸ்ட் 07ஆம் திகதிக்கு; கோட்டாபய அச்சம்!

மாகாண மட்டத்தில் பார்க்கும்போது, ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களில் 52.50 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த நோயாளர்களின் எண்ணிக்கை 30,876 ஆகும். அதேநேரம், தென் மாகாணத்தில் 9,316 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,129 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 4,542 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களே மிக மோசமான பாதிப்பு

மாவட்ட மட்டத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களே மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 12,017 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 11,740 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் 4,262 பேரும், களுத்துறையில் 3,955 பேரும், கண்டியில் 3,575 பேரும், இரத்தினபுரியில் 3,530 பேரும், காலியில் 3,364 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். இலங்கையில் மிகக் குறைவான டெங்கு நோயாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

அந்த எண்ணிக்கை 35 ஆகும். தற்போது நாட்டில் டெங்கு பரவும் அதிக அவதானம் மிக்க 142 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந் நிலையில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து, சூழலை சுத்தமாக வைத்திருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US