நாட்டில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம் ; பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்
நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு புதிய டெங்கு வைரஸ் திரிபு பரவி வருவதே முக்கிய காரணம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, நோயின் தீவிர நிலை தற்போது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் குறிப்பாக மஹரகம மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் டெங்கு பரவல் அதிகளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு வீடுகளை விடவும், பாடசாலைகள், அலுவலக வளாகங்கள், பொது இடங்கள், கைவிடப்பட்ட காணிகள் மற்றும் கட்டுமானத் தளங்கள் போன்ற இடங்களே முக்கிய காரணிகளாக இருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு விசேட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நடவடிக்கைகளின் போது, சில அரச அலுவலக வளாகங்களிலும் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.