ஐதராபாத்தில் முக்கிய வீதிக்கு ட்ரம்பின் பெயர்!
இந்தியா ஐதராபாத்தில் உள்ள முக்கியச் வீதி ஒன்றிற்கு, அமெரிக்க ஜனாதிபதி 'டொனால்ட் ட்ரம்பின் பெயர் சூட்டப்பட்டதற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ' திறப்பு விழா தெலுங்கானாவில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஐதராபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே அமைந்துள்ள வீதிக்கு 'டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கௌரவிக்கப்படும் முதல் அமெரிக்க ஜனாதிபதி நான் தான்
இந்த பெயர் மாற்றத்திற்கான முயற்சிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்ததால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட சில இணக்கமற்ற சூழ்நிலை காரணமாக இத்திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது இருதரப்பு உறவுகள் சீரடைந்து, சுமுகமான சூழல் நிலவுவதால் இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. வீதி திறப்பு விழாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப் ,
"இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள புதிய டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ. இதுபோன்று கௌரவிக்கப்படும் முதல் அமெரிக்க ஜனாதிபதி நான் தான் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.