கொழும்பில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு ; 23 வயது இளைஞர் கைது
கொழும்பு மட்டக்குளி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கங்காராம மாவத்தையில், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
கடந்த வெள்ளிக்கிழமை (26) மட்டக்குளி காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 199 கிராம் 680 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 10 கிராம் 170 மில்லிகிராம் ஐஸ் (மெத்தாம்பெட்டமைன்) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.