ஐஸ் உடன் சிக்கிய தெஹிவளை நபர்
ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (28) தெஹிவளை, பன்னலோக மாவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
150,000 ரூபா ரொக்கம் பணம்
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோவும் 10 கிராம் நிறையுடைய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், விற்பனையின் மூலம் சம்பாதித்ததாக நம்பப்படும் 150,000 ரூபா ரொக்கம் பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.