பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு இன்றி பொருட்களை வழங்க தீர்மானம்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி சலுகை விலையில் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்றது.
இந்திய கடன் திட்டத்தின் ஊடாக அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ததன் மூலமும் அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியை திறந்த கணக்கு முறையின் ஊடாக நிர்வகிப்பதன் மூலமும் நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அளவு மற்றும் விலை அதிகரிப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இப்போது வரை அடுத்த மூன்று மாதங்களில் இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ள இந்த பொருட்களின் அளவுகள் எதிர்வரும் சில மாதங்களுக்கு அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை எதிர்பார்த்த அளவு தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என இறக்குமதியாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.