மைத்திரி அணிக்குள் சூழ்ச்சி அலை; வெளியான தகவல்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக கட்சிக்குள்ளேயே சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அவரை நீக்குவதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீழ்ச்சியடைந்துள்ள சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் தாம் முழுவீச்சாக ஈடுபட்டுள்ள நிலையில் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலரே இவ்வாறு சூழ்ச்சி செய்வதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
அத்துடன் கட்சிக்குள் பெரும்பாலான உறுப்பினர்கள் தனக்கு எதிராகவே இருப்பதாகவும், எனினும் எந்த சவால்களையும் தான் வெற்றிகொள்வேன் என சூளுரைத்துள்ளதாகவும் அந்த தகவகள் தெரிவ்க்கின்றன.