திருகோணமலையில் அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசம்!
திருகோணமலை- இலிங்கநகர் பிரதேசம் அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளாவிய ரீதியில் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில், திருகோணமலையில் இதுவரை 1,225 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 30 மரணங்களும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அதிக தொற்றாளர் இனம் காணப்பட்டதை அடுத்து இலிங்கநகர் பகுதி அபாயவலையமாக பொலிஸ் கட்டுப்பட்டு குழுவினரால் இன்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், இலிங்கநகர் பகுதியில் தேவையின்றி வெளியே நடமாடும் நபர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.
மேலும் இதுவரை , தடுப்பூசி பெறாதவர்கள் உடனடியாக அருகிலுள்ள சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்புமருந்தை போட்டுக் கொள்ளுமாறு மாகாண பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.