காலியான பல்பொருள் அங்காடிகள் ; கொழும்பு மக்களுக்கு காத்திருக்கும் அபாயம்!
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.
சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் கடைகளுக்கு சரியான நேரத்தில் பொருட்களை பெற்றுக்கொள்ள போராடுகிறார்கள். கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் அலமாரிகள் வார இறுதியிலிருந்து பெருமளவு காலியாகிவிட்டன.
இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தமக்கு உரிய நேரத்தில் பொருட்கள் கிடைப்பதில்லை என கடையின் முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்றிலிருந்து அரசாங்கம் எரிபொருள் விநியோகத்தை மேலும் மட்டுப்படுத்தியுள்ள நிலையில், பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான தமது கோரிக்கை மேலும் தாமதமாகலாம் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில், டெலிவரிக்கு வாரம் அல்லது பதினைந்து வாரங்களுக்கு ஒருமுறை வரும் விநியோகஸ்தர்கள், வாரக்கணக்கில் வராததால், சிறு மளிகை கடைக்காரர்களும் தங்கள் பொருட்கள் வற்றியதால் கடையை மூடும் நிலையில் உள்ளனர்.
அதேவேளை பல மில்லியன் மக்களை பட்டினி மற்றும் வறுமையில் தள்ளும் பொருளாதார வீழ்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா இந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.