கொழும்பில் சுழற்றி அடித்த காற்று ; வேரோடு சாய்ந்த பாரிய மரம்
கொழும்பு வெள்ளவத்தை நெல்சன் வீதிக்கு அருகாமையில் காலி வீதியில் வேரோடு விழுந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மரத்தை அகற்ரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்து
அதேவேளை மோசமான வானிலை காரணமாகக் கொழும்பின் பல பகுதிகளும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, சில வீதிகளில் மரங்கள் விழுந்துள்ளமை மற்றும் நீர் நிரம்பியுள்ளமை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதனால், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தடைப்பட்டுள்ள வீதிகள்
பிரேமசிறி கேமதாச மாவத்தையில் லயனல் திரையரங்கம் அருகிலும், கெப்பெட்டிப்பொல மாவத்தையிலும் தேசிய வைத்தியசாலை 4ஆம் இலக்க வாயில் அருகிலும் எல்விட்டிகல மாவத்தை இராணி வீதிச் சந்தி கொட்டாஞ்சேனை ஆர்மர் பார்பர் சந்தி, விகாரை அருகில் வீதிகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மிக பெரும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு உதவ முப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மண் சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
