இலங்கையை புரட்டிப்போட்ட டித்வா புயல் ; இழக்கப்பட்ட 4.1 பில்லியன் டொலர்
இலங்கையை அண்மையில் தாக்கிய 'டித்வா' சூறாவளி காரணமாக, கட்டடங்கள், விவசாயம் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.
இந்த சூறாவளியினால் வீடுகள், வணிகக் கட்டடங்கள் மற்றும் அவற்றுள் இருந்த உடமைகளுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மொத்த உள்நாட்டு உற்பத்தி
அத்துடன், நாட்டின் விவசாய நிலங்கள் மற்றும் பயிர்ச்செய்கைகள் இந்தச் சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளும் சீர்குலைந்துள்ளன. இது தொடர்பில் உலக வங்கி முன்னெடுத்த மதிப்பீட்டுக்கமைய, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
8ம் வகுப்பு மாணவியிடம் ஆபாச பேச்சு ; மாணவர்களின் தாய்மார்களுக்கு பொலிஸார் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
அதன்படி, இந்த சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் தீவிரமான மற்றும் அழிவுகரமான சூறாவளிகளில் ஒன்றான இந்த சூறாவளி, 25 மாவட்டங்களிலும சுமார் 2 மில்லியன் மக்களை கடுமையாக பாதித்துள்ளது.