தமிழ் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிய நடத்துனரை தூக்கி எறிந்த அரசாங்கம் !

Nuwara Eliya Parliament of Sri Lanka Hatton Srilanka Bus School Children
By Sulokshi Mar 07, 2025 01:22 PM GMT
Sulokshi

Sulokshi

Report

 பாடசாலை மாணவர்களை பஸ்ஸில் ஏற்ற மறுத்து அடாவடி செய்த பேருந்து நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

நுவரெலியா பகுதியில் பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸில் ஏற்ற மறுத்த பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

தமிழ் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிய நடத்துனரை தூக்கி எறிந்த அரசாங்கம் ! | Ctb Bus Conductor Dropped Off Students Job Revoked

இ.போ.ச பஸ் நடத்துனர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு முடியும்வரை அவர் சேவையில் உள்ளீர்க்கப்படமாட்டார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கொள்கையொன்றினை அரசாங்கம் வகுத்திருக்கும் சூழ்நிலையில் இப்படியானவற்றை அனுமதிக்க முடியாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

லண்டன் விபத்தில் ஈழத்தமிழர் உயிரிழப்பு

லண்டன் விபத்தில் ஈழத்தமிழர் உயிரிழப்பு

 பேருந்தை விட்டு இறங்குங்கள்

பாடசாலை மாணவர்களுக்கு என்று இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச் சீட்டை, பேருந்து நடத்துனரிடம் காண்பித்த போதும், பருவச் சீட்டை வைத்திருக்கும் மாணவர்களைப் பேருந்திலிருந்து வெளியேறுமாறு நடத்துனர் தொடர்ந்து வலியுறுத்தியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்தள விமான நிலையம் ; மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அனுர அரசாங்கம்!

மத்தள விமான நிலையம் ; மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அனுர அரசாங்கம்!

நாவலபிட்டியிலிருந்து கினிகத்தனை ஊடாக ஹட்டன் வரை செல்லும் அரசப் பேருந்தில், அதிகமாக தமிழ் மாணவர்களே இவ்வாறு புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிய நடத்துனரை தூக்கி எறிந்த அரசாங்கம் ! | Ctb Bus Conductor Dropped Off Students Job Revoked

'இது அரசப் பேருந்து நடத்துனரின் சொந்த பேருந்து அல்ல. பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் பணம் செலுத்தி பருவச் சீட்டைப் பெற்றுள்ளோம். எங்களால் பேருந்தை விட்டு வெளியேற முடியாது' என்று மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இலங்கை பேருந்து, ரயில் சாரதிகளாக பெண்கள்; அதிரடி காட்டும் அரசாங்கம்!

இலங்கை பேருந்து, ரயில் சாரதிகளாக பெண்கள்; அதிரடி காட்டும் அரசாங்கம்!

அதற்குப் பதிலளித்த பேருந்து நடத்துனர், 'ஆம், இது என்னுடைய பேருந்து நீங்கள் அனைவரும் பேருந்தை விட்டு இறங்குங்கள்' எனக் கூறும் காணொளி ஒன்று வௌியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, அந்தக் காணொளியை மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதோடு, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

திருமணமான பெண்ணிடம் மோசமாக நடந்துகொண்ட பொலிஸ் பரிசோதகர்

திருமணமான பெண்ணிடம் மோசமாக நடந்துகொண்ட பொலிஸ் பரிசோதகர்

இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஹட்டன் ​டிப்போவின் முகாமையாளர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையிலேயே  பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர்  நாடாளும்ன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாத் தளங்களாக மாறவுள்ள இலங்கையின் முக்கிய அஞ்சல் நிலையங்கள்

சுற்றுலாத் தளங்களாக மாறவுள்ள இலங்கையின் முக்கிய அஞ்சல் நிலையங்கள்

நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US