அரச பேருந்து நடத்துநரின் மோசமான செயல்: வலுகட்டாயமாக இறக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள்
ஹட்டன் பகுதியில் அரச பேருந்து நடத்துநர் ஒருவர் பருவச்சீட்டு வைத்திருந்த பாடசாலை மாணவர்களைப் பஸ்ஸில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றியுள்ள சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
ஹட்டன் டிப்போவுக்கு சொந்தமான நாவலப்பிட்டியில் இருந்து ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் நடத்துனர், கினிகத்தனை பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களை பேருந்தில் இருந்து வெளியேறுமாறு கடுந்தொனியில் பேசியுள்ளார்.
பருவச்சீட்டு
குறித்த பாடசாலை மாணவர்கள் இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச்சீட்டினை பேருந்து நடத்துனரிடம் காண்பித்த போதும் மாணவர்களை பேருந்தில் இருந்து வெளியேறுமாறு நடத்துனர் தொடர்ந்து வலியுறுத்தியதாக மாணவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதன் போது ”இது அரச பேருந்து நடத்துனரின் சொந்த பேருந்து அல்ல பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் பணம் கொடுத்து பருவச்சீட்டினை பெற்றுள்ளோம் பேருந்தை விட்டு வெளியேற முடியாது” என தெரிவித்த போது பேருந்து நடத்துனர் மாணவர்கள் கடுந்தொனியில் பேசியுள்ளார்.
நாவலபிட்டியில் இருந்து ஹட்டன் வரை செல்லும் அரசு பேருந்தில் அதிகமாக தமிழ் மாணவர்களே இவ்வாறு புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.