சுக்கிர பெயர்ச்சி ; பண மழை கொட்டப்போகும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். அக்டோபர் 03 ஆம் திகதி துலாம் ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 06 ஆம் திகதி வக்ர நிலையில் கன்னி ராசியை அடையவுள்ளார். இந்த கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். இந்த ராசியில் சுமார் 17 நாட்கள் வரை இருப்பார். கன்னி ராசியில் சுக்கிரன் பயணிப்பதால், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை காணவுள்ளனர். இப்போது சுக்கிரன் வக்ர நிலையில் கன்னி ராசியை அடைவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வலுவடைவதால், பண பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். தேவையில்லாத செலவுகளைக் குறைப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். யாருடனாவது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தால், மனம் விட்டு பேசும் போது அது சரியாகும்

கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆளுமையில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். பேச்சுத்திறன் மேம்படும். வியாபாரத்தில் பழைய நட்புகளால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முக்கியமாக நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருப்பதோடு, படிப்படியாக மேம்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் பல மாற்றங்களை காண்பார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். செலவுக்கும், சேமிப்புக்கும் இடையே சமநிலையை பராமரிப்பீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். மனதில் உள்ள அழுத்தம் குறைந்து, மன அமைதியாக இருக்கும்.
