பெரும்போகப் பயிர்ச்செய்கை பாதிக்கப்படும் ; நீர் சிக்கன பயன்பாட்டுக்கு வலியுறுத்தல்
எல் நினோ (El Niño) வானிலை நிலை உருவாகக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், பயிர்ச்செய்கைக்குத் தேவையான பாசன நீரை சிக்கனமாகவும் திறமையாகவும் பயன்படுத்துமாறு விவசாயிகளை நீர்ப்பாசனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பி.எஸ்.டி. ஹெரத் தெரிவித்ததாவது, தற்போது சிறுபோகப் பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீர் நீர்த்தேக்கங்களில் போதுமான அளவில் உள்ளதாகும்.

எனினும், வரவிருக்கும் பெருபோக பயிர்ச்செய்கை எல் நினோ வானிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடும் வாய்ப்பு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை முன்னிட்டு, நீர் வளங்களை மிகவும் கவனமாகவும் திட்டமிட்ட முறையிலும் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வானிலை மாற்றத்தின் தாக்கங்களை கருத்தில் கொண்டு, எதிர்கால பயிர்ச்செய்கை நிலைத்திருப்பதற்காக நீர் மேலாண்மையை மேம்படுத்துவது அவசியம் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது