உயர்தரப் பரீட்சை குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்துள்ளது.
குறித்த மனு தொடர்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை விரிவாக ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர்கள் குழுவொன்றினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டு, பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், குறித்த கோரிக்கையை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்துள்ளது.
இதனையடுத்து, திட்டமிடப்பட்ட கால அட்டவணையின்படி 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.