முதலமைச்சர் விஜய் இன் ஜனநாயகன்; உலகம் முழுவதும் ரசிகர்கள் கோலாகலக் கொண்டாட்டம்!
முதலமைச்சர் , தளபதி விஜய் நடிப்பில் உருவாகி பல்வேறு தாமதங்களுக்கு மத்தியில் 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளதை அடுத்து, ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 8,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு: 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள், இந்திய அளவில்: 3,000 க்கும் மேற்பட்ட திரையரங்குகள், உலகம் முழுவதும்: 8,000 திரையரங்குகள்.

சிறப்பு இசை நிகழ்ச்சியுடன் ரசிகர்கள் கொண்டாட்டம்
'ஜனநாயகன்' திரைப்படம் திரையிடவுள்ளதை முன்னிட்டு, குமரி - கேரள எல்லைப் பகுதியில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
குறித்த திரையரங்கில் வர்ண விளக்குகளில் அலங்காரத்துடன், சிறப்பு இசை நிகழ்ச்சியுடன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அதிகாலை முதலே திரையரங்கிற்கு வெளியே திரண்ட ரசிகர்கள், ஆடல் பாடலுடன் திரைப்படத்தின் வருகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.