சொந்த மகளை வன்புணர்ந்த தந்தைக்கு நீதிமன்றம் அதிரடி
தன் சொந்த மகளை வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காகத் தண்டனை பெற்ற ஒருவரின் மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது;.
மேலும், ஹம்பாந்தோட்டை மேல்நீதிமன்றம் அவருக்கு விதித்த 15 ஆண்டுகள் கடூழிய தண்டனையை உறுதி செய்துள்ளது.

குற்றப்பத்திரிகை
நீதிபதிகளான அமல் ராகராஜா மற்றும் டாக்டர் சுமுது பிரேமச்சந்திரா ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம், தன் மகளுக்கு எதிரான உறவுமுறை வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் எந்தவிதமான நியாயமும் இல்லை என்று தீர்ப்பளித்தது.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், தனது சொந்த மகளுக்கு எதிராக நடைபெற்றதாகக் கூறப்படும் மூன்று பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்பாகக் குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
விசாரணைக்குப் பின்னர், ஹம்பாந்தோட்டை மேல்நீதிமன்றம், மீதமுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து குற்றவாளியை விடுவித்துத் தள்ளுபடி செய்தது; அதேவேளை, குற்றவியல் சட்டத்தின் 364(3) பிரிவின் கீழ் ஒரு குற்றச்சாட்டில் 2025 ஜூலை 16, அன்று அவரைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தது.
மேல்நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்தது.
மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு 400,000 ரூபாய் நட்டஈடு வழங்குமாறும், அபராதம் மற்றும் நட்டஈட்டுத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாதங்கள் கடூழிய தண்டனை அனுபவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்கமைய, நீதிமன்றம் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்ததுடன், குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பையும் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் உறுதிப்படுத்தியது.
இந்தத் தண்டனையானது தீர்ப்பு வழங்கப்பட்ட நாளான 2025 ஜூலை 16 ஆம் திகதி, முதல் நடைமுறைக்கு வர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்ட அபராதத் தொகையும் நட்டஈட்டுத் தொகையும் மாற்றமின்றித் தொடரும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.