மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி ; மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நடந்த துயரம்
கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூவர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (13) பிற்பகல் 4:45 மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்தில் கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே உயிரிழந்தார்.

மேலதிக விசாரணை
உயிரிழந்த நபர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி, பின்னர் மருத்துவக் காரணங்களுக்காக ஓய்வு பெற்ற ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்னல் தாக்கத்தால் காயமடைந்த ஏனைய இருவரையும் பிரதேசமக்கள் கஹட்டகஸ்திகிலிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.