திருமண அழைப்பிதழை ஆய்வுக் கட்டுரை போல் வடிவமைத்த ஜோடி! இணையத்தில் வைரல்
உலகளவில் சமீபக் காலமாக திருமண தம்பதியினர் தங்களுடைய திருமண அழைப்பிதழை வடிவமைக்க வித்தியாசமான முறையில் சிந்தித்து வருகிறார்கள்.
அண்மை காலமாக திருமண அழைப்பிதழ் நகைச்சுவைக்காக சமூக வளைதளத்தில் வைரலாகுவதால் அனைவரும் அதே போல தங்களுடைய திருமண அழைப்பிதழையும் வடிவமைக்க முழு ஆர்வத்தையும் காட்டி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் அண்மையில், தமிழிகத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு திருமண ஜோடி, அழைப்பிதழை ஆக்கப்பூர்வமான சிந்தனையை எடுத்து, டேப்லெட் ஸ்டிரிப்பின் பின்புறம் போல வடிவமைத்துள்ளனர், இது சமூக வலைதளத்தில் வைரலானது.
மேலும், இது போன்ற புதுமையான மற்றும் நகைச்சுவையான திருமண அழைப்பிதழ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் மகிழ்விக்கின்றன.
Still can't believe that this is a wedding invitation card ?? pic.twitter.com/DeOD2L8dOo
— rayyan definitely | Booktwt stan ? (@rayyanparhlo) November 25, 2023
அந்த வகையில், பங்களாதேசத்தில் ஒரு PhD முடித்த ஜோடி தங்களுடைய திருமண அழைப்பிதழை ஆய்வுக் கட்டுரை போல் வடிவமைத்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.