நாட்டில் மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு
நாட்டில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (15) மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை மாலை 4 மணிவரையில் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்கள்
நுவரெலியா மாவட்டம்: மதுரட்ட, வலப்பனை, ஹங்குராங்கெத்த, நில்தண்டாஹின்ன இரத்தினபுரி மாவட்டம்: எலபாத
கேகாலை மாவட்டம்: புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, மாவனெல்ல

குருநாகல் மாவட்டம்: ரிதிகம
மாத்தளை மாவட்டம்: ரத்தோட்ட
முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட இடங்கள்
கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல ஹம்பாந்தோட்டை மாவட்டம்: கடுவன, வலஸ்முல்ல
களுத்துறை மாவட்டம்: புலத்சிங்ஹல, பாலிந்தநுவர, வலல்லாவிட்ட, தொடங்கொட
கேகாலை மாவட்டம்: ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை, கேகாலை, தெஹியோவிட்ட, ரம்புக்கனை, வரகாபொல
மாத்தறை மாவட்டம்: பசுகொட, அத்துரலிய, முலட்டியன
கண்டி மாவட்டம்: ஹதரலியத்த, தும்பனை, பன்வில, உடுநுவர, தெல்தோட்டை, யடிநுவர
மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்க கோரளை, உக்குவலை, மாத்தளை
இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, அயகம, எஹெலியகொட, வெலிகேபொல, இரத்தினபுரி, கலவானை, இம்புல்பே, நிவித்திகல, கொலோன்ன, பலங்கொடை
குருநாகல் மாவட்டம்: பொல்பிதிகம