நாட்டிற்கு சுமார் 23 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்தன
இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை சைனோபாம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.
அதன்படி, 23 லட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த தடுப்பூசிகள் இன்று அதிகாலை 5.20 அளவில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அவற்றில் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் மூன்று லட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நன்கொடையாக இலங்கை இராணுவத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுவரை சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 80 இலட்சமாக அதிகரித்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை இலங்கையிலுள்ள சீன தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
அத்துடன், இந்த மாதத்தில் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 70 இலட்சமாக அதிகரித்துள்ளதாகவும் சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.