இலங்கையில் தொடரும் சோகம்! கொரோனாவால் முக்கிய தாதிக்கு நேர்ந்த கதி
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மற்றொரு தாதியர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொரோனா தொற்றால் இறக்கும் நான்காவது தாதியர் இவர்தான். மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியரான இந்து அமரசிங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.
இரண்டு குழந்தைகளின் தாயான, அவர் இறக்கும் போது 56 வயது. மினுவாங்கொட அடிப்படை மருத்துவமனையின் 2 வது விடுதியின் பொறுப்பாளராக இருந்த திருமதி அமரசிங்க, கொவிட் நோயாளிகளுக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டதிலிருந்து மருத்துவமனையில் மிகவும் மரியாதைக்குரிய தாதியராக இருந்தார் என்று மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அவரது இறுதி சடங்குகள் நேற்று முன்தினம் மாலை மினுவாங்கொடை தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.