வைத்தியசாலை ஒன்றில் 11 வைத்தியர்கள் உட்பட 120 பேருக்கு கொரோனா உறுதி!
பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் உள்ளடங்கலாக நிர்வாகப் பிரிவில் 120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவுக்கு பொறுப்பான வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் உள்ளடங்கலாக நிர்வாகப் பிரிவில் 95 பேர் இம்மாதத்துக்குள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களில் 60 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பதுளை பொது வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் மூவர் உள்ளிட்ட 11 வைத்தியர்கள், தாதியர்கள் 13 பேர், குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் எட்டு பேர், ஏனைய அதிகாரிகள் 11 பேர், சிற்றூழியர்களில் சாரதி, பாதுகாவலர்கள் உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று வைத்தியசாலையில் ஐந்து கொரோனா சிகிச்சை விடுதிப் பிரிவுகளில் 150 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தொற்றாளர்களில் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒட்சிசனின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.