நாளை யாழ்ப்பாணம் வரும் அதிசொகுசு சுற்றுலா கப்பல்
இந்தியாவில் இருந்து MV Express (Cordelia Cruises) என்ற அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது நாளை (15) யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக காங்கேசன் துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார்.
10 தளங்களைக் கொண்ட மிகவும் பிரமாண்டமான இந்தக் கப்பலானது இந்தியாவில் இருந்து சுமார் 1391 சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்டு அம்பாந்தோட்டை, திருகோணமலை ஊடாக நாளைய தினம் காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது.
இந்தக் கப்பலில் சுமார் 584 சிப்பந்திகள் (ஊழியர்கள்) பணி புரிகின்றனர். அதேவேளை குறித்த சுற்றுலாப் பயணிகள் கப்பலானது கடந்த 2023 ஆம் ஆண்டு 9 தடவைகளும், 2024 ஆம் ஆண்டு 6 தடவைகளும் இலங்கைக்கு வந்திருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு நாளை (15) மற்றும் 22 ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்கள் வருகை தரவுள்ளதாக த.பகீரதன் மேலும் தெரிவித்தார்.