சியா விதைகளை அதிகமாக உட்கொண்டால் இத்தனை பக்கவிளைவுகளா?
சியா விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நல்ல குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க நார்ச்சத்து அவசியம். ஆனால் அதிகமாக உட்கொள்வது பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உடல் எடையை குறைக்க பலர் சியா விதைகளை சாப்பிடுகிறார்கள். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த விதை சந்தேகத்திற்கு இடமின்றி பல நன்மைகளை அளிக்கிறது. குறிப்பாக எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. அதற்காக சியா விதைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடவும் கூடாது.
செரிமான பிரச்சனைகள்
சியா விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நல்ல குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க நார்ச்சத்து அவசியம். ஆனால் அதிகமாக உட்கொள்வது பிரச்சனைகளை ஏற்படுத்தும். செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
மெல்லிய இரத்தம்
சியா விதைகளில் ஒமேகா 3 உள்ளது, இது இரத்தத்தை மெல்லியதாக மாற்றுகிறது. நீண்ட காலமாக உயர் இரத்த அழுத்த மருந்துகளை உட்கொள்பவர்கள் சியா விதைகளை அதிகமாக உட்கொள்ளக்கூடாது.
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது
சியா விதைகளில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது. ஆனால் அதேசமயம் சர்க்கரை அளவை அதிகமாக குறைப்பது முற்றிலும் சரியல்ல. சியா விதைகள் நீரிழிவு நோயாளிகள் அதிகமாக உட்கொண்டால் தீங்கு விளைவிக்கும். நீங்கள் இன்சுலின் எடுத்துக் கொண்டால் இந்த விதைகளை சாப்பிடவே கூடாது.
பலருக்கு சியா விதைகளுக்கு ஒவ்வாமை இருக்கலாம். அந்த வகையில் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு, வயிற்று வலி, தோலில் அரிப்பு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒரு நாளைக்கு எவ்வளவு சியா விதைகள் சாப்பிடுவது பாதுகாப்பானது? ஒரு நாளைக்கு 28 கிராம் சியா விதைகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்
தண்ணீரில் அல்லது பாலில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். இல்லையெனில் குறைந்தது 5-10 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைத்து அதன் பிறகு சாப்பிடுவது நல்லது என்கின்றனர்.