கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட கான்ஸ்டபிள்: சந்தேக நபர் அடையாளம்
ஹம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை, விதாரந்தெனிய பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “இந்த தாக்குதலில் 15 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை பிடிக்க, சிறப்பு முற்றுகைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குடிபோதையில் இருந்த சுமார் 15 பேர் கொண்ட கும்பல் பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டுக்குச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பொலிஸார் மற்றும் அவரது சகோதரர் வீட்டில் தாக்கப்பட்டனர்.
பின்னர், சந்தேக நபர்கள் பொலிஸாரை அருகிலுள்ள உணவகத்திற்கு அழைத்துச் சென்று தாக்குதலில் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த அவரது சகோதரர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.