கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஏற்பட்ட குழப்பம் ; அரசாங்கம் மீது குற்றம் சுமத்தும் பொதுமக்கள்
கொழும்பு - பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இன்றைய தினம் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் அதிகாலை 03.00 மணியில் இருந்து பொதுமக்கள், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் வரிசையில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், திடீரென டோக்கன் வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்ட நிலையில் அப்பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, பொலிஸார் அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளதுடன் மக்களுடன் உரையாடியதை தொடர்ந்து, சற்று முன்னர், சேவைகள் தொடங்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
அதேவேளை, நாட்டில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் 24 மணிநேர சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் திடீரென டோக்கன் வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டமையால் மக்கள் சிரமத்திற்குள்ளாக்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.