தனியார் கல்வி நிலையத்தில் மோதல்; மாணவ மாணவிகள் 9 பேர் வைத்தியசாலையில்...நடந்தது என்ன?
குருநாகல் - இப்பாகமுவ பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 05 மாணவிகளும் 04 மாணவர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஒரு மாணவியும் மூன்று மாணவர்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
நடந்தது என்ன? பொலிஸார் விசாரணை
அதேசமயம் 04 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பொல்கொல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பாகமுவ, பக்மீகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த தனியார் கல்வி நிறுவனத்தில் கல்விப் பொதுத் தராதர சித்தி பெறாத மாணவர்கள் கல்வியைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.