அர்ச்சுனாவுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இன்று (14) காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியின் போது, தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கருத்துக்களை வெளியிட்டதாக அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாகவும் முறையான வகையிலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியே இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் இணை ஏற்பாட்டாளர் நிருக்ஷ குமார உள்ளிட்ட குழுவினர் நேரடி விஜயம் மேற்கொண்டு, கொழும்பிலுள்ள காவல்துறை தலைமையகத்தில் இந்த முறைப்பாட்டைக் கையளித்துள்ளனர்.