ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்டதற்கு எதிராக கொழும்பில் போராட்டம்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராக அமைதி வழிப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று (07) காலை 9.00 மணிக்கு கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இந்தப் போராட்டம் நடைபெறும் என நிதியகம சந்திம தேரர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை சீருடை
நம் அனைவருக்கும் நாடு, இனம், மதம் மற்றும் கலாசாரம் என அனைத்தும் உள்ளன. நாங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கவில்லை.
ஆனால், நமது கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி ஆடையைக் களைந்து, பகிரங்கமாகக் கொண்டு வரப்பட்டமை அனைவரின் மனதையும் அதிர்ச்சியடையச் செய்த ஒரு விஷயமாகும்.
இவ்வாறானதொரு முன்னுதாரணம் நாட்டில் எவருக்கும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வது இளைஞர்களாகிய நம் அனைவரினதும் பொறுப்பாகும் என தெரிவித்துள்ளார்.
எனினும், மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது சிறைச்சாலை சீருடையையே அணிய வேண்டும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சேனக்க பள்ளேதென்ன தெரிவித்துள்ளார்.