flydubai துணை விமானி ஹமாமி தீவிரவாத தாக்குதலுக்கு முன் தாயிடம் கூறிய பகீர் தகவல்
வருங்கால மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து ஓமன் விமானி ஹமாமி சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு கவனம் பெற்றுள்ளது.
அவர் வெளியிட்ட பதிவில், தனது வருங்கால மனைவி திருமணத்திற்குப் பின்னர் கட்டாயம் நிகாப் அணிய வேண்டும் என்றும், அவர் வேலைக்குச் சென்று வந்தால் அந்த வேலையை விட்டுவிட வேண்டும் என்றும் தனது தாயாரிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஹமாமி விதித்த இந்த நிபந்தனைகளை பல பெண் வீட்டார் தொடர்ந்து நிராகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தனது தாயார் பெண் வீட்டாரிடம், தான் ஒரு விமானி என்பதைத் தெரிவித்த பின்னரே அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் ஹமாமி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அவர் பின்னர் நீக்கிய மற்றொரு பதிவில், ஆண்கள் பணியாற்றும் இடங்களில் பெண்களும் பணியாற்றுவது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆண்கள் பணியாற்றும் பணியிடங்களில் பெண்களும் வேலை செய்வதால் கலாச்சார சீர்கேடு ஏற்படுவதாகவும் அந்தப் பதிவில் ஹமாமி தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணொளியை இங்கு காணலாம்.....