சிறை உடையில் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகவுள்ள ஞானசார தேரர்
கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொது பல சேனா அ அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரோ, செவ்வாய்க்கிழமை (06) சிறை அதிகாரிகளால் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
ஞானசார தேரர் சிரைச்சாலை உடையில் நீதிமன்றத்தில் ஆஜர்ச் எய்யப்ப்ட்டார்.
இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கூற்றை வெளியிட்டதற்காக ஞானசார தேரர் மீது சட்ட மா அதிபர் தாக்கல் செய்த வழக்கு கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அதைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ரகல, ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அன்று ஒரு பிடியாணை பிறப்பித்தார்.

அதன்படி ஞானசார தேரர், மேற்படி பிடியாணை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக செவ்வாய்க்கிழமை (06) சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டார்.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ரகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கைதுக்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த கலகொட அத்த ஞானசார தேரர், சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஞானசார தேரர் சார்பில் சட்டத்தரணி பாசன் கருணாரத்னவுடன் ஆஜரான சட்டத்தரணி சஞ்சய மரம்பே, ஜனாதிபதியின் மன்னிப்பு ரத்து செய்யப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் மனநல பாதிப்புக்கு உள்ளாகி நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், தேரர் ஒரு வனவாசத்தில் தியானம் செய்து வந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவருக்கு நீதிமன்ரை புறக்கனிக்க எந்த நோக்கமும் நிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து ஞானசார தேரர் செவ்வாய்க்கிழமை (06) கைதி உடையில் நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்பட்ட விடயத்தையும் சட்டத்தரணி விமர்சித்தார்.
குறித்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்ரம் உத்தர்வொன்றினை பிறப்பிக்க வேண்டும் என அவர் வாதிட்டார். பௌத்தம் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் இது ஒரு வருந்தத்தக்க நிலை. என அவர் கூறினார். எனினும் அதனை நீதிபதி நிராகரித்தார்.
குறித்த விவகாரம் தொடர்பில் ஏதும் பிரச்சினை இருந்தால் அதனை மேல் நீதிமன்றங்களில் முறையிட முடியும் எனவும், இந்த நீதிமன்ருக்கு அந்த விவகாரம் எந்த சம்பந்த்தமும் இல்லை என நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும் கண்டறிக விளம்பர இடம் செய்திகள் வாசி சிறப்பு கட்டுரைகள் இருப்பினும், முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்ட நீதிபதி, இவ்வழக்கை எதிர்வரும் அக்டோபர் 23 அன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார்.
இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் ஒரு கருத்தைத் தெரிவித்ததற்காக, இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
பயண வழிகாட்டி இதனிடையே மீண்டும் இன்று புதன்கிழமை (7) ஜானசார தேரர், கொழும்பு மேலதிக நீதிவானால் பிறப்பிக்கப்ப்ட்ட மற்றொரு பிட்ஃபியாணை உத்தர்வுக்கு அமைய கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்படவுள்ளார்.