கொழும்பு அரசியல்: திரைமறைவில் நடப்பவை என்ன?
Colombo
Dullas Alahapperuma
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Shankar
இலங்கையின் புதிய ஜனாதிபதி தேர்தல் தெரிவில் ரணிலுக்கும், டக்ஸுக்குமிடையில் கடும் போட்டி நிலவுவதாக செய்திகள் தீயாக வெளிவந்த வண்ணம் உள்ளன. என முகநூலில் Suren Subramaniam என்பவர் பதிவிட்டுள்ளார்.
- டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளவர்களில் எத்தனை பேர் வாக்குறுதிப்படி செயற்படுவார்கள் என்ற சந்தேகம் இருக்கிறது.
- கட்சித்தலைவர்கள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்தாலும் எத்தனைபேர் ,அவர்களின் பேச்சை கேட்பார்கள் என்பது நிச்சயமில்லை ( சுதந்திரக்கட்சி - தமிழ்க்கூட்டமைப்புக்குள் இதுதான் நிலைமை )
- கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகளின் அழுத்தம் கட்சித்தலைவர்கள் பலருக்கு சென்றிருப்பதால் ,பலர் மனச்சாட்சியின்படி வாக்களிக்கும்படி தங்களின் எம்.பிக்களை கேட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
- இந்த செய்தி எழுதப்படும் இந்த நிமிடத்தில் டலஸ் பக்கம் ஆதரவு அதிகமான நிலை இருப்பதுபோல இருந்தாலும் , ரணில் சில வியூகங்களை வகுத்து எம்.பிக்களை வளைத்திருக்கிறார்.
- இவற்றுக்கெல்லாம் அப்பால், டலஸ் அழகப்பெரும டீமின் முக்கிய தூண்களை கழற்ற, இன்றிரவு ரணில் முக்கிய சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளார்.
- விமல் வீரவன்ச இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டினால் பொதுஜன பெரமுனவின் டலஸ் ஆதரவு எம்.பிக்கள் அதிருப்தியில்.
- ஹக்கீம் , ரிஷார்ட் , தௌபீக் ஆகியோரை தவிர அதாவுல்லாஹ்வுடன் சேர்த்து 11 முஸ்லீம் எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு.
- முஸ்லிம் விரோதப்போக்கை கடைப்பிடித்த சன்ன ஜெயசுமன, ரத்தன தேரர் உட்பட்ட எம்.பிக்கள் டலஸின் வருகையின் பின்னால் இருப்பதாக அவர்கள் விமர்சனம்.
தமிழ்க்கூட்டமைப்புடன் எழுத்துமூல உடன்பாட்டுக்கு டலஸ் - சஜித் அணி வந்திருக்குமாயின் தங்களுடன் அப்படியொரு ஏற்பாடு நடக்கவேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றிரவு தீர்மானம் எடுக்க சந்தர்ப்பம், இல்லையேல் டலசுக்கு வழங்கும் ஆதரவு மீள் பரிசீலனை. - கூட்டிக்கழித்துப் பார்த்தால் சிறியதொரு வித்தியாசத்தில் ரணில் வெல்லும் வாய்ப்பே இப்போது இருக்கிறது.
- கொழும்பு அரசியலின் திரைமறைவில் இந்த நிமிடத்தின் நிலைமை இதுதான் என sivaramasamy என்பவர் தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US