கொழும்பில் ஒரே மாதிரியான உருவம் - இலக்கு மாறி சுட்டுக்கொலை செய்யப்பட்ட நபர்
கொட்டாவ நகரில் உள்ள தனியார் ஆய்வு கூடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் தவறான இலக்கு என தற்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்தேகொட, நாமல் உயன பிரதேசத்தில் வசிக்கும் ஆய்வக ஊழியரான 33 வயதான மிஹிரன் பத்மசிறி என்பவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
கொலையாளியின் சகோதரனும் ஒரே மாதிரியான தோற்றம்
கடந்த மாதம் 15ஆம் திகதி பொரளை சிறிசர தோட்ட வீட்டுத் தொகுதியில் கூரிய ஆயுதங்களால் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டவரின் சகோதரன் என நினைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் ஆய்வு கூடத்தில் பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபரும் பொரளை கொலையாளியின் சகோதரனும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்