இடிந்து வீழ்ந்த தலதா மாளிகையின் சுவர்!
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் இடதுபுறத்தில் அமைந்துள்ள பழைய பழைய சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது நாட்டில் தற்போது கடும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது.
இந்நிலையில் அரசு மாளிகைக்கு முன்னால் உள்ள அகழிக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பக்கவாட்டு சுவரின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மண் சுவரின் ஒரு பகுதியே நேற்று இரவு இடிந்து விழுந்துள்ளது.
ஆபத்தான நிலையில் அரசமரம்
அதேவேளை கண்டி விஷ்ணு கோவிலுக்கு முன்பாக உள்ள தேவ சம்ஹிந்தாவிற்கு அருகில் உள்ள அகழியின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இடிந்து விழுந்தது.
அதன் பின்னர் தொல்லியல் திணைக்களத்தின் மேற்பார்வையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் இதன் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கட்டுமான பணியின் போது, ஆறு மாதங்களுக்கு முன், ஐந்து மீட்டர் அளவுக்கு பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்த நிலையில் இம்முறை வரலாற்று சிறப்பு மிக்க அரச மாளிகையின் முன் பகுதி இடிந்து விழுந்துள்ளது.
இதனால், அங்குள்ள அரசமரம் ஆபத்தான நிலையில் உள்ளதால், தொல்பொருள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு அறிவித்து, அவ்விடத்தை உடனடியாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.