இயக்குநர், நடிகருமான பாக்யராஜின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி
மறைந்த இயக்குநர், நடிகருமான பாக்யராஜின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர், கண்கலங்கிய நிலையில் இருந்த நடிகர் சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.

இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை
இயக்குனரும், நடிகரும், வசனகர்த்தரும், தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னருமாக அறியப்படும் கே பாக்யராஜ் இன்று சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவருக்கு வயது 73. இவரது மறைவு திரைத் துறையை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந் நிலையில் நடிகர்கள், நடிகைகள், திரைப் பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் கே பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளை திரைத்துறைக்கு பாக்யராஜ் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில், அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.