இயக்குனர் பாக்கியராஜ் காலமானார்; பெரும் துயரத்தில் திரையுலகம்
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பல்வேறு திறமைகளை கொண்ட இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று (27) காலமானார். உடல்நிலை கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரும், திரைக்கதை ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படுபவருமான கே.பாக்யராஜ் மறைவு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு
இயக்குனர் பாக்கியராஜ் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இயக்குனர் பாக்கியராஜ் கடந்த 1953ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்த அவருக்கு தற்போது 73 வயதாகிறது. இவரது மறைவிற்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் இரங்கல் குவிந்து வருகின்றன.

அதேவேளை தனது குருநாதர் பாரதிராஜா உயிரிழந்த 17 நாட்கள் இடைவெளியிலேயே இயக்குனர் பாக்கியராஜ் உயிரிழந்துள்ளமை தமிழ் திரையுலக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாக்யராஜ் இயக்குனர் அவதாரம்
கடந்த 1979ம் ஆண்டு சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படம் மூலம் பாக்யராஜ் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
அதன் பிறகு இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங், டார்லிங், டார்லிங், பொய் சாட்சி, முந்தானை முடிச்சு, விதி, சுந்தர காண்டம், அவசர போலீஸ் 100, ராசுகுட்டி மற்றும் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி என ஏராளமான வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
அதோடு, வெற்றிகரமான நடிகராகவும் பாக்யராஜ் வலம் வந்தார். நக்கல், நையாண்டியுடன் கூடிய நகைச்சுவை வசனங்கள் மட்டுமின்றி, சாதி மற்றும் மதத்திற்கு எதிரான வலுவான சமூக நீதி கருத்துகளையும் தனது படங்கள் மூலம் பாக்யராஜ் வெளிப்படுத்தினார்.