நீண்ட காலமாக நிலவி வந்த வாக்குவாதம்... இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை!
பதுளை - எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெமோதர நெதர்வில் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்றிரவு (20-05-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த வாக்குவாதம் நேற்றிரவு மோதலாக மாறியது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதிய சவள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தெமோதர கிராமிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நீதிவான் பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்குச் சடலம் எடுத்துச் செல்லப்படவுள்ளது.