அதிகாரிகளை மிரள வைத்த சீன கதவுகள் ; சோதனையில் காத்திருந்த ஷாக்
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலோகக் கதவுகளுக்குள் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,00,000-க்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன் ஒன்றைச் பரிசோதித்த சுங்க வருவாய் பணிப்பாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இந்தச் சட்டவிரோதக் கடத்தலைக் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தைப் பெறுமதி
சுங்கப் பிரிவினரின் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காகவே இந்தக் சிகரெட்டுகள் கதவுகளுக்குள் மிகவும் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் சந்தைப் பெறுமதி 30 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சுங்க வருவாய் பணிப்பாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.