நொடியில் மாறிய வாழ்க்கை ; குடும்பத்தையும் இழந்து, பல கோடிகளையும் இழந்த தொழிலதிபர்
இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக திபெத், சீன எல்லையில் ஒரு செயற்கையாக ஒரு ஏரி உருவாகி, அந்த ஏரி உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறி வடக்கு நேபாளத்தில் உள்ள ஆறுகளில் பாய்ந்ததால் அந்த நாட்டில் உள்ள நான்கு ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
வெள்ளத்தில் சிக்கிய இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தவிட்டனர்.

ஆடை வியாபாரம்
இந்நிலையில்தான் நேபாள வெள்ளத்தால் அங்கு ஆடை வியாபாரம் செய்து கொண்டிருந்த உத்தரப்பிரதேச சேர்ந்த இந்திய தொழிலதிபர் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்.
வெள்ளப்பெருக்கில் சிக்கி அவரின் மூன்றடுக்கு வீடு, 4 கடைகள் மற்றும் 4 குடோன்களை அசோக்குமார் இழந்துவிட்டார்.
இதனால் 45 கோடி மதிப்பிலான தொழிலை அவர் முற்றிலுமாக இழந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.. அதோடு வெள்ளத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேரையும் அவர் இழந்துவிட்டார்.
தற்போது அணிவதற்கு சட்டை கூட இல்லாமல் மற்றவர்களிடம் வாங்கி அணியும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார்.