தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழப்பு
கம்பஹா மாவட்டத்தில் தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து மூன்று வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் கம்பஹா மாவட்டம், வத்தளைப் பிரதேசத்தில் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரெனக் காணாமல்போயுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தொட்டிக்குள் விழுந்து கிடந்த குழந்தை
பெற்றோர் அவரைத் தேடியபோது அக் குழந்தை நீர் நிரம்பிய தொட்டிக்குள் விழுந்து கிடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையைப் பெற்றோர் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ராகம வைத்தியசாலையில் குழந்தையின் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.