தமிழர் பகுதி நீதிமன்றின் மேலதிக பதிவாளர் நாயகம் கைது
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் மேலதிக பதிவாளர் நாயகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சான்று பொருட்கள் மாயம்
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்று பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடி முப்பது இலட்சம் பெறுமதியான , 350 கிராம் தங்க நகை, காணாமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் இன்று ( 21 ) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிக்குடி வழக்கு சான்று பொருள் பொறுப்பாளர் நேற்று ( 20 ) களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.