பிள்ளைக்காக வாங்கிய சிக்கன் பப்ஸ் ஒன்றினுள் பாம்புக் குட்டி ; அதிர்ச்சியில் உறைந்த பெண்
இந்தியாவின், தெலுங்கானாவிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் தனது பிள்ளைக்காக சிக்கன் பப்ஸ் ஒன்றினுள் பாம்புக் குட்டி இருப்பதைக் கண்ட பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள வெதுப்பகத்தில் பெண்ணொருவர், கோழி இறைச்சி சிற்றுண்டி ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளார்.
தனது குழந்தைகளுக்காக ஒரு முட்டை பப்ஸ் மற்றும் ஒரு சிக்கன் பப்ஸ் வாங்கி சென்றார்.
அந்தச் சிற்றுண்டியில் பாம்புக் குட்டி ஒன்று இறந்து கிடைப்பதைக் கண்டு குறித்த பெண் அதிர்ச்சியடைந்த நிலையில், வெதுப்பக உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்தும், குறித்த வெதுப்பக உரிமையாளர் அதற்கான பதில் அளிக்காமையினால், அந்தப் பெண் காவல்துறையிடம் முறைப்பாடு அளித்தார்.
அதன் பிரகாரம், காவல்துறையினர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.