டி20 உலகக் கிண்ணம் ; ரசிகர்களைக் கவர்ந்த சென்னை சுப்பர் கிங்ஸின் புதிய சீருடை அறிமுகம்
டி20 உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்த கையோடு, கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் 2026 பருவகாலம் எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தச் சீசனுக்காக 10 அணிகளும் தற்போது தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் தமது புதிய சீருடைகள் மற்றும் வீரர்களின் விபரங்களை வெளியிட்டு வருகின்றன.

ஏற்கனவே லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் இந்தச் சீசனுக்கான தமது புதிய ஜெர்சிகளை அறிமுகம் செய்திருந்தன.
இதனைத் தொடர்ந்து, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியும் தனது புதிய சீருடையை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஜெர்சி குறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள பிரத்தியேக காணொளி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மஞ்சளாடைப் பட்டாளத்தின் இந்தப் புதிய தோற்றம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், ஐபிஎல் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.